பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

டின் தொடக்கத்தில் கூட அப்படித்தானிருந்தது. சந்தன மரத்தில் வடிக்கப்பட்ட சாரதாதேவி உருவம் ஸ்ரீ வித்யாரண்யர் காலத்தில் தங்க விக்கிரகமாக வடிக்கப் பட்டது. 1791ல் இந்த தங்க விக்கிரகம் கொள்ளையடிக்கப் பட்டது. அப்போது மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் இதுகேட்டு வருந்தினர். மற்ருெரு தங்க விக்கிரகம் செய்ய வேண்டி பொன் கொடுத்தார். ஸ்ரீ சச்சிதானந்த பாரதி III ஜகத்குருவாயிருந்தபோது இந்த விக்கிரகம் செய்யப்பட்டது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே ஸ்ரீ சச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்ம பாரதி இந்தக் கோயிலை கருங்கல் கொண்டு கட்டினர். 1916ல் இந்தப் புதிய கோயில் கும்பாபிஷேகம் ஸ்ரீ ஜகத்குரு சந்திர சேகர பாரதி மகாஸ்வாமியால் செய்யப்பட்டது. தற்போதைய ஜகத்குரு பீடம் ஏறியபின் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இந்தக் கோவில் பிரகாரத்திலே சக்தி கணபதிக்கும் புவனேசுவரிக்கும் சந்நிதிகள் உள்ளன. மண்டபத்திலே ராஜ ராஜேசுவரிக்கும் மகிஷாசுர மர்த்தனிக்கும் சிலைகள் உள்ளன.

கர்ப்பக்கிரகத்தில் உள்ள சாரதாதேவி பிரம்மவித்தை ரூபியாக இருக்கிறாள். பிரக்ஞான கனருபியாக இருக்கிறாள். அதாவது உலகெலாம் ஈன்ற அன்னை. கையிலே அமுத கலசம், ஜபமாலை, புத்தகம், சின்முத்திரை இவ்விதம் காட்சி தருகிறாள் அன்னை.

அத்வைதப் பிரசாரத்தின் பொருட்டு சங்கரர் ஏற்படுத்திய முதல் பீடம் சிருங்கேரியாதலால் அங்குள்ள