பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

யில் நிலவும் ஆன்மிக பாரமார்த்திக உணர்ச்சியில் நானும் ஒன்றினேன். புதியது எதுவுமில்லை; பழக்கமில்லாதது எதுவுமில்லை. உயிர்த்துடிப்புடன் கூடிய அந்தச் சூழ்நிலையிலே எதையும் உய்த்துணரும் உணர்ச்சியே பெருக்கெடுத்து ஓடியது.

நீரிலே மூழ்கியது அந்த நினைப்பிலே விளைந்த மாறுதலைப் பூர்ணமாக்கியது. அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப இசைந்தேன். தலைமுறை தலைமுறையாக அங்கேயே வாழ்ந்தவன் போல் ஆனேன்.

நரசிம்ம வனம் புகுந்தேன். அந்த இடத்தைச் சேர்ந்தவன் போல. ஏதோ ஒரு சக்தி என்னை உந்தித் தள்ளியது.

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகா சுவாமியின் அதிஷ்டானத்தை அடைந்தேன். பூத உடலில் அவர் காட்சி தரவில்லை. எனினும் அகத்தே நிகழும் ஆன்மிக அதிர்ச்சி மூலம் அவர் இருப்பது உணர்ந்தேன். எனக்கு இறைவழி உணர்த்தியவரும், தமது தெய்வீக அமைதியால் எனது தெய்வ விடாய் தீர்த்த தெய்வீக ஊற்றும் பொலிவிற் சிறந்தவரும், பூரணமாய் விளங்கியவரும், முற்றுப் பெற்றவரும் ஆகிய எனது குருவின் அதிஷ்டான யாத்திரை முடிந்தது.

மூர்த்தி, லிங்கம் ஆகியவற்றின் முன் தாளும் தடக்கையும் கூப்பித் தரையில் வீழ்ந்து வணங்கி அவற்றை உற்று நோக்கியவாறு எதிரே அமர்ந்தேன். எனது சூழ்நிலையை மறந்தேன். தெய்வீக உணர்ச்சியால் ஆட்-