பக்கம்:முந்நீர் விழா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

முந்நீர் விழா



கிடைத்த முத்துக்களில் மிக உயர்ந்தவற்றைப் பொறுக்கிக் கடற்பகுதித் தலைவன் பாண்டிய மன்னனுடைய திருவடிகளிலே கொண்டு வந்து வைத்தான். அவற்றைக் கோத்து மன்னனுக்கு ஆரமாக அணியச் செய்யலாம் என்பது அத்தலைவனது ஆசை. பாண்டியன் என்ன சொன்னான் தெரியுமா? "இப்படியே மாலை யாக்கி நம்முடைய தலைநகர்த் திருக்கோயிலில் உள்ள அம்மைக்குச் சாத்தச் செய்யவேண்டும்" என்றான். பாண்டிய குலத்தில் பிறந்தவர்களுக்கு வேறு என்ன எண்ணம் தோன்றும்?

கடற்கரைக்கே மன்னன் சென்றிருந்தான். ஆலித்துப் பாயும் அலைகள் கரைகளை மோதின. பாண்டியனது திருவடியிலே வந்து புரண்டன. உடன் இருந்த புலவர் ஒருவர், "நிலம் மட்டும் அன்று; கடலும் உனக்கு அடிமை என்று காலிலே பணிகிறது” என்றார். தலைமைப் புலவர், 'தன்னுடைய இருப்பிடத்துக்கு வந்தமையால், வருணன் தன் கரங்களால் அடி கழுவுகிறான்’ என்றார். "ஆம், ஆம்" என்று அமைச்சர்கள் தலையை அசைத்தனர்.

முத்துக் குவைகளை அவ்விடத்திலேயே வாங்கிச் செல்வதற்குப் பல நாட்டிலிருந்து வாணிக மக்கள் வந்திருந்தனர். பாண்டி நாட்டில் தம் நாட்டுச் செல்வத்தைக் கொண்டு வந்து குவித்துவிட்டு, அந்த நாட்டு முத்துக்களை வாங்கிச் சென்றார்கள் அவர்கள்.

*

இந்தக் காட்சிகளை எல்லாம் புலவர்களும் அமைச்சர்களும் அப்போது புகழ்ந்து கொண்டிருந்தனர். அரசனும் தன் அகக்கண்ணால் அந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்தான். கடல் அலை தன் அடியை நனைக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/11&oldid=1221200" இலிருந்து மீள்விக்கப்பட்டது