பக்கம்:முந்நீர் விழா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முந்நீர் விழா

3


கடற்கரையில் நின்ற நினைவுதான் அடிக்கடி அவன் உள்ளத்தே தோன்றியது.

'கீழ் கடற்கரைக்குப் போய் அங்கு உள்ள காட்சிகளைக் கண்டோம். இப்படியே மேல் கடற்கரைக்குப் போய்ப் பார்த்து வரவேண்டாமா?' என்று கேட்டான் மன்னன்.

'திருவுள்ளத்திற்கு எப்படி உவப்போ அப்படியே செய்யலாம்' என்று அமைச்சர் ஒருவர் சொன்னர்.

மேல் கடற்கரையில் கீழ் கடலில் உள்ள முத்து இல்லாவிட்டாலும் அங்கே பவளம் விளைகிறதென்று தெரிகிறது' என்ருர் மற்ரறோர் அமைச்சர்.

"அங்கும் போய்ப் பார்த்துவர வேண்டியதுதான்" என்று மாகீர்த்தி தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

மேல் கடற்கரைக்கும் மன்னன் சென்று வ்ந்தான். அங்கும் கடற்கரையில் அலைகள் தன் அடியை வருடச் சிறு குழந்தையைப் போலக் களிப்புடன் சிறிது நேரம் நின்றான். 'கீழ் கடலும், மேல் கடலும் அடிவருட நிற்கும் பேறு வேறு எந்த மன்னருக்கு உண்டு?” என்று புலவர்கள் பாடினர்கள். 'பாண்டி நாட்டுக்கு இருபுறமும் கடலே எல்லை. இதனிடையே யாருக்கும் உரிமை இல்லை. இந்தக் கடல்கள் பாண்டிய மன்னருடைய புகழைத் தங்கள் அலைகளால் உலகம் முழுவதும் பரப்புகின்றன” என்று ஒரு புலவர் பாடினர்.

இந்தப் பாடல்களைக் கேட்டபோது மன்னனுக்கு முன்பு போல முகத்தில் மலர்ச்சி உண்டாகவில்லை. அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு குறை அப்போது தோன்றியிருக்க வேண்டும். இல்லையானுல் அந்தப் பாராட்டைக் கேட்டு அவன் பெருமூச்சு விடக் காரணம் இல்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/12&oldid=1214558" இலிருந்து மீள்விக்கப்பட்டது