பக்கம்:முந்நீர் விழா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முந்நீர் விழா

9



ஆவல் இன்னும் நிறைவேறவில்லை. அது நிறைவேறும் காலமும் இடமும் அண்மையிலே வந்துகொண்டேஇருந்தன.

தென் கடற்கரைக்குத் தலைவனுக இருந்த அரசன் தெங்க நாட்டரசனைப் போல விடாப்பிடியாக எதிர்த்தான். அவனுடைய வீரத்தைப் பாண்டியன் உள்ளத்துக்குள் வியந்து மெச்சினான் சுத்த வீரனுக்கு அழகு இது. கடைசியில் அவனும் பணிந்தான். பாண்டியன் இப்போது பாரத தேசத்தின் தென் கோடியில் நின்றான். கடற்கரையை அடைந்தான். அந்த அலைகடலோசை அவன் காதில் இனிமையாக ஒலித்தது. அதைக் கேட்க அவன் எத்தனை வீர முரசையும் வாளொலியையும் வேலின் ஒலியையும் எழுப்பவேண்டியிருந்தது! அமைச்சரும் புலவரும் படைத்தலைவரும் சூழ்ந்துவரக் கடலை அணுகினான். அன்று பாண்டி நாட்டிலிருந்து புறப் பட்ட போர்ப் பயணம் நிறைவேறிய நாள். மற்ற வெற்றிகளைக் கொண்டாடியது போல அதைக் கொண்டாட மன்னனுக்கு விருப்பம் இல்லை. அந்த வெற்றி அவனுக்கு ஈடும் எடுப்பும் இல்லாத வெற்றி. ஆதலால் அது பாண்டிய நாடு முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டிய விழாவாக இருக்கவேண்டும் என்பது அவன் ஆசை. . . . . .

கடற்கரையில் மணலில் ஆவலோடு நடந்தான் மன்னன். கையில் வேலைப் பிடித்திருந்தான். அன்று, தன் நகரத்திலிருந்து புறப்படுவதற்கு முன் அந்த வேலைப் பிடித்துக்கொண்டுதான் சபதம் செய்தான். இன்று அந்தச் சபதம் நிறைவேறிவிட்டது. அவன் இதற்கு முன் இரண்டு கடலை எல்லையாகப் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/18&oldid=1214717" இலிருந்து மீள்விக்கப்பட்டது