பக்கம்:முந்நீர் விழா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

முந்நீர் விழா


கிள்ளிவளவன் என்னும் அரசன் புலவர்களைப் போற்றி வாழ்ந்தவன். கவிதை பாடும் புலமையும் பெற்றவன். அவன் சோறுடைய சோணாட்டுக்கு அரசனாதலின், அந்தச் சோற்றின் பெருமையை நன்கு உணர்ந்திருந்தான்.

உடம்பு படைத்தோருக்கு நோய் வருவது இயற்கை. அவை மருந்தால் தீரும். நல்ல உடம்பு படைத்திருந்தாலும் ஒருவனுக்கு ஒரு நோய் வரும். அந்த நோய் யாவருக்கும் உண்டு. அது இருப்பதனால்தான் மனிதன் உழைக்கிறான். அதுதான் பசிநோய். பசி நோய்க்கு உட்படாமல் இருப்பவன் யாரும் இல்லை.

"பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய் செய்த பறிதான்'

என்று சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடினார். பசி நோய் நம் வாழ்நாளிற் பெரும்பகுதியைப் பறித்துக்கொள்கிறது. இந்த நோயைத் தீர்ப்பதற்கு மனிதன் என்ன என்ன ஆட்டமெல்லாம் ஆடுகிரறான்!

"சேவித்தும் சென்றிரந்தும்
தெண்ணிர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும்
பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழில் உடம்பை
வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்'

என்பது ஒளவையார் பாட்டு. வயிற்றுக் கொடுமையைப் போக்க நாழி அரிசி வேண்டும்; அதற்காகப் பிறரைச் சேவித்துத் தொண்டு செய்கிறொம். கையால் ஆகாத போது சோறுடைய செல்வரிடம் சென்று கை ஏந்தி இரந்து நிற்கிருேம். திரைகடல் ஒடியும் திரவியம் தேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/23&oldid=1214730" இலிருந்து மீள்விக்கப்பட்டது