பக்கம்:முந்நீர் விழா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

முந்நீர் விழா



தீர்த்துக் கொள்ளும்படி சோற்றை வழங்குகிறவர்கள், பெரிய வைத்தியர்கள்.

சோழ நாட்டில் சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந் திருந்தான் பண்ணன் என்னும் வேளாண் செல்வன். பல வயல்களை உடையவன் ஆதலின் நெல் வளம் அவனிடம் சிறந்திருந்தது. அதோடு, அவன் உள்ளம் அன்பு வளம் உடையதாகவும் இருந்தது. பிறர் பசியைத் தான் விளைவித்த சோற்றினால் போக்கிப் புகழ் படைத்த அறச் செல்வன் அவன். அவனைத்தான் கிள்ளிவளவன் பாடினான். பசிப்பிணி மருத்துவன்' என்று சிறப்பித்துப் பாடினான். என்னுடைய வாழ் நாளை இவனுக்கு வழங்க முடிந்தால் மிக்க மகிழ்ச்சியோடு செய்வேன். நான் வாழும் வாழ்நாளையும் இவன் பெற்று வாழட்டும்' என்று மனம் குளிர்ந்து பாடினான்.

2

புலவர்கள் ஒரு வள்ளலைப் பாடுவதென்றால், அக்கவியைச் சொல் ஒவியமாக்கிப் பாடுவார்கள். நாடகக் காட்சிபோல் அமைத்துப் பாடுவார்கள். கிள்ளிவளவன் பண்ணன் புகழைப் பாடத் தொடங்கினான்.

'யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய'

என்று தொடங்கினான். மேலே பாட்டில் ஒரு கற்பனைக் காட்சியைக் காட்டுகிறான்.

பண்ணன் கலைஞர்களைப் பாதுகாக்கிறவன். அன்ன தானத்தில் சிறந்தவன். முக்கியமாக, குழந்தைகளுக்கு வயிறுநிரம்பச் சோறு போட்டுக் கையிலும் கொடுத்து அனுப்புகிறவன். தம் பசிக்குத் தாமே ஈட்டிக்கொள்ள இயலாதவர்கள் குழந்தைகள். தாமே தமக்குச் சோறு சம்பாதிக்காவிட்டாலும், பிறர் மகிழ்ந்து ஊட்டி இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/25&oldid=1214735" இலிருந்து மீள்விக்கப்பட்டது