பக்கம்:முந்நீர் விழா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பசிப்பிணி மருத்துவன்

17


புறும்-நிலையில் இருப்பவர்கள் இரு வகையினர். கடவுளர் ஒரு வகை, குழந்தைகள் மற்றொரு வகையினர். இவர்களில் கடவுளர் தாமே உண்பதில்லை. குழந்தைகள் உண்பார்கள். அவர்களுக்குப் பண்ணன் ஆர்வத்துடன் சோறு அளித்து வந்தான். இது மிக மிகச் சிறப்பான செயலென்று எண்ணிச் சோழன் அதை அழகாக எடுத்துச் சொன்னான்.

பசியினால் வருந்தும் பாணரும், பிற கலைஞரும் ஒரு கூட்டமாகக் கூடிப் பண்ணனை நாடி வருகிறார்கள். அவர்களோடு ஒரு புலவரும் வருகிறார். அவர்களுக்கு எதிரில் ஒரு பாணர் கூட்டம் பண்ணன் வீட்டில் விருந்துண்டு, பரிசும் பெற்றுக்கொண்டுவருகிறது. அக்கூட்டத்திலுள்ள பாணரைப் பார்த்துப் புலவர், "பண்ணன் வீடு அருகில் இருக்கிறதா?" என்று கேட்கிறார்.

“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய”

என்று தொடங்கிய அந்தப் பாட்டு,

'பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ?கூறுமின் எமக்கே"

என்று முடிகிறது.

"பாணரே, இவனைப் பாருங்கள். இவனுடைய சுற்றத்தாரைப் பாருங்கள். பசியினால் வாடிக் குலையும் இவர்களைப் பார்த்தாலே, ஐயோ, பாவம்' என்று இரங்கத் தோன்றுகிறதல்லவா? இவர்களும் நானும் பண்ணனை நாடி வருகிருேம். அவன் வீடு எங்கே?" என்று கேட்கிறார் புலவர்.

"அதோ, உணவு கொள்கிறவர்களின் ஆரவாரம் உங்கள் காதில் விழவில்லையா?" என்கிறான் எதிரில் வரும் பாணன்.

"கேட்கிறது. புதியதாகப் பழுத்த ஆலமரத்தில், பறவைகளெல்லாம் சேர்ந்து ஒலித்தாற்போல, எங்கோ

முத்_2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/26&oldid=1214736" இலிருந்து மீள்விக்கப்பட்டது