பக்கம்:முந்நீர் விழா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

முந்நீர் விழா

 உண்ணுபவர்களுடைய ஊலி அரவம் கேட்கிறது. ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை." -

"இதோ பாருங்கள்; இந்தக் குழந்தைகள் அவனுடைய வீட்டிலிருந்துதான் வருகிறார்கள்' என்று, பாணன் சோற்றைக் கையிலே வைத்துக்கொண்டு களிப்புக் குரலோடு செல்லும் குழந்தைகளைக் காட்டுகிறான்.

புலவர் அந்தக் கூட்டத்தைப் பார்க்கிறார். 'முன்பு இருந்தே இந்தக் காட்சியைக் கண்டு வருகிறோம். மேகம் மழை பெய்யப் போவதை உணர்ந்து எறும்புகள் தம் வாயில் முட்டையைக் கவ்விக்கொண்டு மேட்டு நிலத்தை நோக்கிச் சாரி சாரியாகப் போவதைப் பார்த்திருக்கிறேன். வரிசை வரிசையாக இந்தக் குழந்தைகள் வெள்ளைச் சோற்றுருண்டையோடு போவது அந்த எறும்புக் கூட்டத்தின் காட்சியை நினைப்பூட்டுகிறது. தூரத்திலிருந்து பார்த்தால், தலைகள் ஒரே கறுப்பாகத் தோன்றுகின்றன. கையில் உள்ள சோற்றுருண்டைகள் பளிச்சென்று வெள்ளையாகத் தெரிகின்றன. நான் சொல்லும் உவமை பொருத்தமாக இல்லையா?”

"ஆம், மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இப்படிப் போகும் சிறுவர்களைக் கண்டிருக்கிறீர்கள். கண்டும், பண்ணன் வீடு எங்கே என்று கேட்கிறீர்களே!”

"இந்தக் குழந்தைகளின் வரிசையை முதலில் கண்டபோது, அருகில்தான் அவன் வீடு இருக்கும் என்று எண்ணினுேம். ஆனால், வர வர வழி மாளவில்லை. எத்தனை பிள்ளைகள்! உலகத்துக் குழந்தைகள் எல்லாருமே இங்கே வந்து விட்டார்களோ? இந்த வரிசை ஒரு காதம் இருக்கும்போல இருக்கிறதே! சட்டென்று அவன் வீட்டுக்குப்போய் உண்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/27&oldid=1214739" இலிருந்து மீள்விக்கப்பட்டது