பக்கம்:முந்நீர் விழா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பசிப்பிணி மருத்துவன்

19



வேண்டிய நிலையில் இருக்கிறவர்கள் இவர்கள். உணவு கண்டு பல நாட்கள் ஆயின. மெல்ல இந்தக் குழந்தைகளைக் கண்டு களித்துப் போகலாம் என்பதற்கு இல்லை. ஆகையால் கேட்கிரறோம். உங்களை மாத்திரம் கேட்கவில்லை; எவ்வளவோ பேரைக் கேட்டுவிட்டோம்; கேட்டுக்கொண்டே வருகிறோம். இந்தக் குழந்தைகளின் வரிசையைப்பற்றிச் செல்லுங்கள்' என்று சொல்லுகிறார்கள். அப்படித்தான் வந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் புறப்படும் இடத்தை, அந்தப் பசிப்பிணி மருத்துவனுடைய இல்லத்தை நாங்கள் கண்டோம் இல்லை. ஐயா! சொல்லுங்கள், அவன் வீடு பக்கமா, தூரமா? தயை செய்து சொல்லுங்கள்.'

இப்படி எதிரே வரும் பாணனைப் பார்த்து ஒரு புலவர் பாடுவதாகக் கிள்ளிவளவன் பண்ணனைப் பாராட்டியிருக்கிறான்:

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர், காண்கிவன் கடும்பின திடும்பை,
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊண்ஒலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும்; தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ, சேய்த்தோ? கூறுமின் எமக்கே.

(வாழிய - வாழட்டும். பாணர் - பாணரே. காண்க இவன். கடும்பினது இடும்பை - சுற்றத்தாரின் துன்பத்தை. யாணர்-புதியதாகப் பழுத்த. பழுமரம் - பழுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/28&oldid=1214741" இலிருந்து மீள்விக்கப்பட்டது