பக்கம்:முந்நீர் விழா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

முந்நீர் விழா



ஆலமரம். புள்-பறவை. இமிழ்ந்தன்ன-ஒலித்தாற்போன்ற. பொய்யா எழிலி - பொய்க்காத மேகம். வற்புலம் - மேட்டு நிலம். சில் ஒழுக்கு-சிறிய வரிசை. ஏய்ப்ப-ஒப்ப. வீறு வீறு - வேறு வேறாக. இருங்கிளை - பெரிய கூட்டம். சிறா அர் - சிறுவர்களை. காண்டும் - காண்கிறோம். தெற்றென - தெளிவாக. அணித்தோ - அருகில் உள்ளதோ. சேய்த்தோ - தூரத்தில் உள்ளதோ.]

சோறு கொண்டு செல்லும் குழந்தைகளின் கூட்டத்தை நெடுந்துாரத்திலிருந்து பார்த்துக்கொண்டு வருகிறார்கள் இவர்கள். பசித்தவர்களுக்குச் சோறு கிடைக்கும் இடம் தெரிந்தால் அங்கே போவதற்கு விரைவார்கள். இவர்களும் பசிக் கொடுமையால் விரைகிறார்கள். கணக்கில்லாத குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் பண்ணன் புகழை, இப்படி அழகிய காட்சி ஒன்றைக் காட்டிப் பாடுகின்றான் கிள்ளிவளவன்.

இந்தப் பசிப்பிணி மருத்துவனை, சிறுகுடி கிழான் பண்ணன்' என்று வழங்குவர் புலவர். இந்தப் பாடல் புறநானூற்றில் இருக்கிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/29&oldid=1214744" இலிருந்து மீள்விக்கப்பட்டது