பக்கம்:முந்நீர் விழா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

முந்நீர் விழா



வரைப்- பார்த்து, "இந்த ஊரில் வேறு செல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறாரே; அவர்கள் இவரை விடப் பணக்காரர்களோ?' என்று கேட்டார்.

"ஆமாம், அவர்கள் பணத்தைச் செலவழிக்காமல் மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே வருகிரறார்கள். இவருக்குப் பணத்தைச் செலவழிக்கத் தெரியுமே யொழியச் சேர்க்கத் தெரியாது. அதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்வேன்.'

'அப்படியா! ஏதாவது ஒன்று சொல்லுங்கள்: கேட்கிறேன்.” .

'இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் பக்கங் களில் பஞ்சம் வந்தது. நெல் சாரியாக விளையவில்லை. இருக்கிறதைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு செட்டாக வாழவேண்டியிருந்தது. அப்போதும் இவரிடத்தில் யார் யாரோ புலவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அந்தப் பணக்காரர்கள் தங்கள் வாசலை அடைத்துக் கொண்டார்கள். இந்தப் புண்ணியவானோ எப்போதும் போல் வருவாரை வரவேற்றார். இவர் சாப்பிட்டாரோ, இவர் மனைவி சாப்பிட்டாளோ, நான் அறியேன். ஊரெல்லாம் திண்டாடும் அந்தச் சமயத்தில் வரும் புலவர்களுக்கு ஒரு வேளையாவது சோறு போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது இவர் செய்த தருமத்தைப் பார்த்த நாங்கள், இவரைத் தெய்வப் பிறவியென்றே எண்ணிணோம்.' -

"இவரைப் பாடவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். -

"ஆமாம்.” -

இவரோ, எல்லோரையும் பாடவேண்டும் என்று சொல்கிறார். ' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/33&oldid=1214753" இலிருந்து மீள்விக்கப்பட்டது