பக்கம்:முந்நீர் விழா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

 முந்நீர் விழா


என்ன? கையில் அள்ளிக் குடிக்கப் போதாதா? வற்றாமல் நீர் வந்துகொண்டிருப்பதாயிற்றே!

கடல் நீரை மேகம் வற்றச் செய்து உறிஞ்சிக் கொண்டு போய் எங்கோ பொழிகிறது. அந்தச் செல் வர்களின் செல்வத்தையும் வேறு யாராவது வற்புறுத்தி அடித்துக்கொண்டு போய்ச் செலவழிப்பார்கள். ஒளவையார் இந்த எண்ணங்களையெல்லாம் புதைத்துப் பாடினர். 'உப்புக் கடலைப் போன்ற பெரிய பணக்காரர்களும் இருக்கிறார்கள்; கிணற்றில் உள்ள ஊற்று நீரைப் போல நீயும் இருக்கிறாய்' என்று பாட்டைத் தொடங்கினார்

உவர்க்கடல் அன்ன செல்வரும் உளரே!
கிணற்றுஊற் றன்ன நீயுமார் உளையே!

பிறகு வாழ்த்தலானர். 'அந்தப் பணக்காரர்களுக்கு மேலும் மேலும் பெருஞ் செல்வம் உண்டாகட்டும் நீ...” இப்போது அருகில் இருந்தவர்களின் ஆவல் மிகுதியாயிற்று. 'நீ பல காலம் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்!"

செல்வர்தாம் பெருந்திரு வுறுக!பல்பகல்
நீவா ழியரோ! நெடிதே.

ஒளவையார் இதனோடு நிறுத்தவில்லை. இந்த உப காரியின் பெருமையைச் சொல்லாமல் பாட்டு முடியாதல்லவா? பஞ்சகாலத்தில் அவர் புலவர்களைக் காப்பாற்றிய செய்தி பெரிய சிறப்பாகத் தோன்றியது. யாரும் தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் பதுக்கி வைத்துக்கொள்ளும் பஞ்ச காலத்திலும் உன் னிடத்தில் உள்ள பொருளை எங்களைப் போன்றவர்களுக்கு வழங்கி, எங்கள் பாடலை ஏற்றுக்கொள்பவன் நீ."-இவ்வாறு பாடி முடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/35&oldid=1214756" இலிருந்து மீள்விக்கப்பட்டது