பக்கம்:முந்நீர் விழா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூவம் தியாக சமுத்திரம்

39



கூறினான். கம்பரும் அவனை இழித்துப் பாடினர். இதனால் இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது.

வாணியத் தாதனுடைய புலமையைப் பாராட்டிச் சோழ மன்னன் அவனுக்குக் கூவம் தியாக சமுத்திரத்தை முற்றுாட்டாக வழங்கினான். அதனால் அப்புலவன் அடிக்கடி கூவத்துக்கு வந்து சில நாள் தங்கிச் செல்வது வழக்கம். அவனுடைய புலமை நலத்தை. அறிந்து, அவனை உபசரித்து அளவளாவி இன்புற்றனர் அவ்வூர் மக்கள்.

கம்பர் அந்தப் பக்கமாக வருகையில் கூவத்திலுள்ள பெருமக்கள் அவரைத் தம் ஊருக்கு வரவேண்டுமென்று அழைத்தபோது, அவர் வர மறுத்துவிட்டார். வாணியத் தாதனுக்கு உரிய ஊர் அது; அங்குள்ளவர்கள் அவனிடம் மிக்க ஈடுபாடுடையவர் என்பதை உணர்ந்தே அப்படிச் செய்தார்.

கம்பர் வரமாட்டேன் என்று மறுத்தாலும் கூவத்து. மக்கள் அவரை விடவில்லை. சிலர் சேர்ந்து, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து சென்றார்கள். சில சமயங்களில் ஒருவரும் அறியாமல் அவ ருடைய சிவிகையைச் சுமந்தார்கள். அதைக் கம்பர் தெரிந்துகொண்டார்; "நீங்கள் யார்? ஏன் என் சிவிகையைச் சுமக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

"கலைமகள் ஆணுருவுடன் எழுந்தருளி யிருக்கும் அவதாரம் தாங்கள். தங்கள் சிவிகையைச் சுமக்கும். பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது பற்றிப் பெருமிதம். அடைகிறோம்' என்றார்கள் அவர்கள். -

"உங்கள் ஊர் எது?"

"கூவம் தியாக சமுத்திரம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/38&oldid=1214761" இலிருந்து மீள்விக்கப்பட்டது