பக்கம்:முந்நீர் விழா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூவம் தியாக சமுத்திரம்

35



"அது எப்படி?’ என்று கேட்டார் வந்தவர்.

"மற்ற ஊர்க் கிணறுகளில் கிடைக்காத அரிய பொருள் இந்த ஊர்க் கிணற்றில் கிடைக்கும்” என்று பொற்கொல்லர் கூறினார். .

"நீரும் மீனும் கிணற்றில் கிடைக்கும். இந்த ஊர்க் கிணற்றில் வேறு என்ன கிடைக்கும்?” என்ற கேள்வி எழுந்தது. - "நீங்களே அதை நாளைக்குத் தெரிந்து கொள்ளலாம். நாளைக்கு இங்கே வாருங்கள். எங்கள் வீட்டுக் கிணற்றைக் காட்டுகிறேன். உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதை நீங்களே எடுத்துக்கொள்ளலாம்.”

வெளியூர்க்காரருக்கு அவர் கருத்து விளங்கவில்லை. என்ன கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் முந்தியது. அடுத்த நாள் வரையிலும் தம்மால் பொறுத்திருக்க முடியாது போல உணர்ந்தார். ஆனாலும் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

மறுநாள் விடிந்தது. அயலூர்க்காரரும் அவர் நண்பரும் நாராயணர் இல்லம் வந்தார்கள். அப்போது அந்தக் கொடையாளி ஒரு நீண்ட தூண்டிலை அயலூராரிடம் கொடுத்து, வாருங்கள்; கிணற்றங்கரைக்குப் போகலாம்” என்று புன்முறுவலுடன் அழைத்துச் சென்றார்,

அயலூராருக்கு எல்லாம் வினோதமாக இருந்தது. அவருடன் புறக்கடைக்குச் சென்றார்.

"கிணற்றில் உள்ள பொருளை இந்தத் தூண்டிலால் எடுக்கலாம். நீங்கள் தூண்டில் போட்டுப் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் அதைப் போட்டு இழுங்கள்; என்ன கிடைக்கிறதென்று பாருங்கள். எது கிடைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/44&oldid=1214769" இலிருந்து மீள்விக்கப்பட்டது