பக்கம்:முந்நீர் விழா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விச்சுளிப் பாய்ச்சல்
1

தொண்டை நாட்டிலிருந்து கழைக் கூத்தாடும் பெண்பிள்ளை ஒருத்தி வந்திருக்கிறாள் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. எத்தனையோ கழைக் கூத்தர்கள் மூங்கிலை நட்டு அதன்மேல் ஏறிப் பலவகை விளையாட்டுக்களைச் செய்கிறார்கள். ஆனல், இந்தக் கழைக் கூத்தியோ விச்சுளிப் பாய்ச்சல் என்ற புதுமையான விளையாட்டில் வல்லவளாம்.

விச்சுளி என்றால் மீன்கொத்திப்பறவைக்குப் பெயர். மீன் கொத்திக் குருவி நீருக்குமேலே பட பட வென்று சிறகை அடித்துக்கொண்டு ஓரிடத்திலே நிற்கும். மீனைக் கண்டவுடன்லபக்கென்று கொத்திக்கொள்ளும். அது போலக் கம்பத்தின் மேலிருந்து விளையாடும் அந்தப் பெண் யாரேனும் பரிசுப் பொருளாக மோதிரத்தையோ வேறு அணிகலனையோ வீசினால், கம்பத்தின் உச்சியி விருந்து கீழே குதித்து, குதிக்கும்போதே அந்தப் பொருளைப் பற்றிக்கொள்வாள். அதோடு நிலத்தில் விழாமல் மறுபடியும் கம்பத்திலே பாய்ந்து பற்றிக் கொள்வாள். வீசும் பொருளைப் பிடிப்பது பெரிதல்ல; அதைப் பிடித்துக்கொண்டு, மீண்டும் கம்பத்தைச் சார்வதுதான் மிகப் பெரிய விளையாட்டு. தவறினால் உயிருக்கே தீங்கு நேரும் வித்தை அது.

பாண்டியன் அவளுடைய கழைக் கூத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். நகரத்துப் பெருமக்கள் பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/47&oldid=1214775" இலிருந்து மீள்விக்கப்பட்டது