பக்கம்:முந்நீர் விழா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

முந்நீர் விழா

 செய்தாள். ஒருகால் ஏதேனும் தவறு நேர்ந்தால் பாதுகாப்பாக நான்கு ஆட்கள் முரட்டுப் படுதா ஒன்றைக் கீழே பரவலாகப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். தவறி விழுந்தால் அதன்மேல் விழலாம். ஆனால், அது அவ் வளவு பெரிய பாதுகாப்பன்று.

பாண்டியன் மிகவும் கூர்மையாக அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். தன் கையில் இருந்த மோதிரம் ஒன்றை ஒருவனிடம் அளித்து விச்சுளிப் பாய்ச்சல் நடக்கும்போது அதை வீசும்படி சொன்னான். மோதிரத்தை அவன் கழற்றும்போதே அரசியின் மனம் துணுக்குற்றது. வேறு ஏதாவது போடலாமே!” என்று தடுத்தாள். "இல்லை, இல்லை: இதுவே இருக்கட்டும்' என்றான் மன்னன். வீசி எறியும் பொருள் பிறகு அந்தக் கழைக் கூத்திக்கே உரிய தாகிவிடும். தன் கணவனுடைய மோதிரத்தை அந்தப் பெண்மணி அணிவதை நினைத்துப் பார்க்கக்கூட அரசிக்கு விருப்பம் இல்லை. அதைக் கழற்றி அரசன் கொடுத்துவிட்டான். இனி என்ன செய்வது?

அரசிக்கு விளையாட்டின்மேல் மனம் போகவில்லை. அவள் உள்ளத்தே சினம் மூண்டது. கழைக்கூத்தி விச்சுளிப் பாய்ச்சல் செய்யப்போகிறாள் என்று அத்தனை பேரும் தம் மூச்சைக்கூட மெத்தென்று விட்டார்கள். கண்ணை இமைக்காமல் கம்பத்தின்மீதே விழிகளை நட்டார்கள். ஆனால், அரசியின் மனமோ விளையாட்டில் செல்லவில்லை. அவள் உள்ளம் புழுங்கினாள், பெருமூச்சு விட்டாள். -

'என்னுடைய அணிகளில் ஒன்றைத் தருகிறேன்" என்று மெல்ல அரசனிடம் கூறினள்.

'நீ பேசாமல் இரு" என்று அரசன் கடிந்து கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/49&oldid=1214779" இலிருந்து மீள்விக்கப்பட்டது