பக்கம்:முருகன் அந்தாதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

நின்னரு ளாலே கிடைக்கின்ற
தென்னினி நேர்குறைஎன்
இன்னுயி ராம்குக மாமரு
தாசலம் ஏய்ந்தவனே.

(4)

தவம்செய்து நின்பதம் உள்ளத்தில்
தாங்கித் தருக்கொழிந்து
பவம்செயும் பொல்லா வினேயொழித்
தேறும் படிஅறியேன்
நவம்செயும் நின்எழில் மேனியைக்
கண்டுன நாமஞ்சொலிச்
சிவம்செயும் நன்மரு தாசலம்
போற்றித் தெளிந்தனனே.

(5)


தெளிவு வருமென்று நூல்பல
கற்றும் செவி நிறைய
அளிவரப் பற்பலர் பாலே
வினவியும் ஆறுமுகன்
ஒளிவரும் வேலன் அருளின்றி
உண்மை உணர்வதுண்டோ?
களிவர அன்னேன் மருத
மலைதாழ் கருத்தினனே.

(6)

4. நேர்குறை-என்னே அடையும் குறைகள். ஏய்ந்தவனே-பொருந்தி நிற்பவனே.

5. பவம்-பிறப்பு. நவம்-புதுமை. சிவம்-மங்கலம்.

6. அளி வர-அன்பு உண்டாக. தாழ்-பணியும்.