பக்கம்:முருகன் அந்தாதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

எழிலினுக் கியாரும் இணையிலன்
மாயா இளமையினன்;
வழிபடும் அன்பர்க் கெளியவன்
வானவர் வாழ்வுபெறக்
கொழிவளந் தேக்கிக் களிப்புறச்
சூர்க்குலம் கொன்றபிரான்
அழிவறு மாமரு தாசலக்
கோயில் அமர்ந்தனனே. (12)

தனம்பெற லாம்கல்வி எய்தலாம்
வீரக் தசீனப்பெறலாம்
கனம்பெற லாம்புகழ் பெற்றுக்
களித்துக் கவின் பெறலாம்
அனம்பெற லாம்ஆடை பெற்றிட
லாம்நல்லோர் அன்புநலம்
தினம்பெற லாம்மரு தாசல
வேள்அருள் செய்திடினே. (13)


செய்ய திருவடிப் போதும்செவ்
வாடைத் திருவிடையும்
மொய்யுறு மார்பும்முந் நான்கு
கரங்களும் முளயிலும்


12. சூர்க்குலம்-சூரனுடைய குலத்தை.

13, கனம்-மதிப்பு. கவின்-அழகு.