பக்கம்:முருகன் அந்தாதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7



ஐயன் முருகன் மருத
மலைக்குகன் ஆரருளைப்
பெய்யும் விழிகளும் நாயேன்
உளத்திற் பிறங்கினவே, (14)

வேதம் அறியாப் புகழுறு
வோய் என விண்ணவர்கள்
நாதன் அறியா விறலுறு
வோய்என நான்வந்திலேன்
காதற் குறமகட் கன்பன்
எனவந்து கால்புகுந்தேன்
ஈதென் எனுதருள் செய்மரு
தாசலத் தின்னமுதே. (15)

அமுதே அனைய மொழிவள்ளிக்
காக அரும்புனத்தில்
இமையோர் வணங்கிய கின்னடி
போந்த தெனல்அறிந்தேன்
நமையாள்வன் என்னும் அந் நம்பிக்கை
கொண்டு நளினஅடி
தமைமேவி னேன்மரு தாசலத்
தோங்கும் தனிச்சுடரே. (16)


14. மொய்-வலிமை. அயில்-வேல்.

15. விறல்-வெற்றி மிடுக்கு. ஈது என்-இது என்ன பேதைமை.

16. நளினம்-தாமரை