பக்கம்:முருகன் அந்தாதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

சுடர்வடி வேலுண்டு காலன்
வருங்கால் துனே வரற்குப்
படர்எழில் தோகை மயிலுண்டு
மாயைப் பரப்பழிக்கக்
கடலெனும் கந்த னருளுண்டு
தோன்றும் கருவொழிக்க
இடமுறு மாமரு தாசலம்
சென்றே இறைஞ்சுவனே.  (17)

இறைஞ்சுகின் றேனே இவன்நமக்
காட்பட்ட ஏழையென்றே
நிறைந்த கருணையில் எள்ளள
வீந்து கிறுத்துவையேல்
குறைந்து விடுமோ வரையாமல்
ஈயும் கொடைவள்ளலே
அறைந்த முரசொலி ஆர்மரு
தாசலத் தாண்டவனே.  (18)

ஆண்ட அநேகம் அரசர்
அழிந்தனர் ஆற்றல்மிகப்
பூண்ட விறல்வீரர் போயினர்
கல்விப் பொருப்பெனவே


17. கருபிறவி, ஆகுபெயர்.

18. வரையாமல்-அளவு குறியாமல்,