பக்கம்:முருகன் அந்தாதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

சிற்பர மேனித் திருவெழிற்
கோரெல்லை செப்பலுண்டோ
மற்பொரு தோளாய் மருத
மலேயுறை மாமணியே. (24)

மணியில் ஒளிபோல் மலரில்
மணம்போல் மகிதலத்தில்
திணிவுற் றிருந்தனை யாயினும்
நாயேன் திகைத்தனன்காண்
அணியுற்ற நின்திருக் கோலத்தைக்
காட்டி அருள் தருவாய்
பிணிமுற்றும் நீக்கும் மருதக்குன்
றோங்கும் பெருஞ்சுடரே. (25)

சுடருருக் கொண்டது கைவேல்
சுடருருத் துன்னும்மயில்
சுடருரு வாய்ந்தது கோழிகின்
கோலம் சுடருருவே
சுடரும் கதிரினில் தோன்றுவ
துன்றன் சுடரொளியே
சுடரும் மருத மலையினிற்
கோயில்கொள் தூயவனே - (26)


24. மல்பொருற்போரைச் செய்யும்.

25. திணிவுற்றுசெறிந்து அணி-அழகு.

26. கதிரினில்-குரியனிடத்தில்,