பக்கம்:முருகன் அந்தாதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தூயவ ராயினும் அல்லவ
ராயினும் சோர்வின்றிநின்
ஏய எழிற்கோலம் கண்டன
ரேல்இன்பம் எய்துவரால்
மாயையின் சேய்சமர்ப் பூமியில்
கின்னெழில் மாண்புகண்டான்
ஆயினன் மாமயில் என்னே
மருதா சலப்பரனே, (27)

பரனே பரம்பர னேயர
மாய பரவத்துவே
அரனே அரியே அயனே
அருகாஅல் லாவெனச்சொல்
வரனே வரந்தரு வானவ
னேசீர் மருதமலைக்
குரனே உனேயன்றி உண்டோ
பிறபொருள் ஓதுதற்கே. (28)

ஓதும் மறையே மறையினில்
ஓங்கிய உட்பொருளே
நாதமும் விந்துவும் ஆகி
நிறைந்த நயச்சுடரே


27. ஏய-பொருந்திய. மாயையின் சேய்-சூரபன்மன். சமர்ப் பூமி-போர்க்களம்.

28. வரனே-மேலானவனே. உரனே - வலிமையாக உள்ளவனே,