பக்கம்:முருகன் அந்தாதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

கதுவும் திருமேனி கொண்டிங்கு

நாயேங்கள் காணும்படி

மதுவொன்று சோலே மருதக்குன்

றத்தில் வயங்கினேயே. (34)


வயங்கொள்ள லாகா மனத்தினில்

நின்னுரு வைக்குமந்த

நயங்கொள்ள லின்றி மயங்கினேன்

நீரின் நலவுருவை

இயங்கும் படியென் உளத்தே

இருத்த இசைகுவையோ

மயங்கு மவர்காண மாட்டா

மருத மலேயரசே, (35)


அரசே எனத்தேவர் போற்றிய

வேந்தனும் அன்று குலேந்

துரமேது மின்றி தினதடி

தாழ்ந்தான் உறுமவற்காய்

வரமேவுசூரன் குலமறுத்

தாய் என் மயலறுக்கும்

தரமேது சொல்வாய் மருதாச

லாஎன்றன் தாரகமே. (86)

34. கதுவும்-மேற்கொள்ளும். மது-தேன். வயங்கினே-விளங்கினாய்

35. வயங்கொள்ளலாகா-வசப்படுத்த முடியாத, நயம். நன்மை.

36. வேந்தன்-இந்திரன். உரம்-வலிமை. வரம்-தவத்தால் பெற்ற வரங்கள். தரம் தகுதி. தாரகம்-ஆதாரமான பொருள்.