பக்கம்:முருகன் அந்தாதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பாடிப் பரிந்து வழிபடப்

பெற்றிலாப் பாவிஉனக்

கூடிச் சகிக்க மருதா -

சலவழி கூறுவையே. (41)


கூறு படாத முழுவின்பம்

தந்து குளிரவைத்து

மாறு படாதருள் என்தெய்வ

மேசுடர் மாமணியே

வேறு படாதுன் அடியாரைப்

போற்றி விரைமலர்கள்

நாறு படாம்போற் படர்மரு

தாசலம் கண்ணுவனே. (42)


கண்ணிய நின்னடி யாரைப்

பணிந்து நயந்துபத்தி

பண்ணிய தால்வரும் புண்ணியத்

தால்தொக்க பாவமெலாம்

அண்ணிய சூரியன் முன்பனி

என்ன அகன்றிடுமே

திண்ணிய கெஞ்சர் தொழுமரு

தாசலத் தெய்வதமே. (43)

41.சானம்-தியானம் பரிந்து-இரங்கி.

42. நாறு படாம் போல்- மணம் வீசும் போர்வையைப் போல.

42.காது படம் போல்-மணம் வீசும் போர்வையைப் போல