பக்கம்:முருகன் அந்தாதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

வதமே புரிந்த அவுணரை
மாய்க்க வருகதையோ
இதமே புரிநின் கதைசூரன்
நின்னருள் ஏற்றதனால்
நிதமே நடம்புரி மஞ்ஞையாய்ச்
சேவலாய் நீடினன்அவ்
விதமே அருள்புரி வோன்நீ

மருத விலங்கலனே.
(44)

விலங்கலன் மெய்யினால் ஆயினும்
நாயேன் வெதும்புமனம்
துலங்கும் பலவெண்ணத் தால்விலங்
காயினன் தூயநின்றன்
இலங்குரு வத்தினை யுள்ளே
இருத்தின் இனியுய்குவேன்
கலங்கலில் லார்பணி மாமரு

தாசலக் கண்மணியே.
(45)

கண்மணி பூண்டு திருநீறு
பூசிக் கசிந்துருகிப்
பண்மணி யான திருப்புகழ்
பாடிப் பணிந்துகின்றன்
ஒண்மணி யாகிய ஆறெழுத்
தோதி உவந்திருக்கப்


44. அவுனரை-அசுரரை. நின் கதை வருகதையோ. விலங்கலன்-மலேயையுடையோன். 45. மெய்யில்லை விலங்கு அலன்.