பக்கம்:முருகன் அந்தாதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

இருந்த படியிருந் தேகாந்த
நன்னிலே ஏய்ந்துவிழி
விருந்தெனும் நின்சுடர்க் கோலத்தை
உள்ளே மிளிரவைத்துத்
திருந்திய மோனத்தில் ஒயாத
இன்பத்தைத் தேக்கிடவே
வருந்தினன் நீயருள் வாய்மரு
தாசலம் வாழ் ஐயனே, (54)

ஐயா எனக்கருள் அப்பா
எனக்கருள் ஆறுமுகச்
செய்யா எனக்கருள் தேவே
எனக்கருள் செஞ்சுடர்வேற்
கையா எனக்கருள் மாமரு
தாசலக் கந்தனெனும்
மெய்யா எனக்கருள் வேளே
எனக்கருள் வீறுறவே. (55)

வேதாந்த மென்பர்சித் தாந்தமென்
பார்பின்னர் வேறுசொலும்
நாதாந்த மென்பர்போ தாந்தமென்
றேஒன்று காட்டுவரால்


54. தேக்கிட-அருந்தி ஏப்பம்விட. வருத்தினன்-உழைத்தேன்; முயன்றேன்.

55, செய்யா-செந்நிறமுடையவனே,