பக்கம்:முருகன் அந்தாதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

மேகங்கண் டாடும் மயின்மேற்
பவனி விரைந்துவரும்
ஏகன்கண் டென்னும் மொழிவள்ளி
நாயகன் ஏர்தருவி
சாகன் மருத மலேக்கும
ரேசன் தருமருட்குத்
தாகங் கொளுமடி யாரடி
யேஎன் தலையினவே. (64)

தலைச்சங்கத் தேபுல வோனென
மன்னித் தமிழ்புரந்தாய்
மலைக்குகைக் குட்பட்ட கீரன்
கவிதை வனேந்தருளி
அலைக்கின்ற கற்கி முகியைத்
தடிந்தாய் அணிமருத
மலைக்கும ரேசரின் தாள்பாடும்.
ஆற்றல் வழங்குவையே. (65)

ஏதமில்லாக்கள வுத்திருக்
காதல் எழிற்குறத்தி
மாதிடம் செய்தனே கற்புத்
திருமணம் வானவர்கோன்


64. கண்டு என்னும்-கற்கண்டு என்று சொல்லும். விசாகன்-விசாக நட்சத்திரத்தில் தோன்றியவன்.

65. கற்கிமுகி குதிரை முகமுள்ள பெண் பூதம். தடித் தாய்-அழித்தாய்,