பக்கம்:முருகன் அந்தாதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சுகமொன்று சோலை மருத
மலைமேல் சுடர்பவனே
(71)

சுடரில் விழுகின்ற விட்டிலைப்
போலத் தொகுபுவியில்
அடரும் மயலின்பம் கொண்டஇவ்
வேழை அறுமுகமும்
படரும் எழிற்றிருப் பாதமும்
எண்ணிப் பணியஅருள்
இடர்குன்றச் செய்மரு தாசலக்
கோயில் இருப்பவனே.
(72)

இருப்பதும் உண்பதும் சற்றும்
கவலை இலாமல்உயிர்
தரிப்பதும் எல்லாம் நினதரு
ளாலன்றிச் சார்வதுண்டோ
சிரித்தொரு மூன்று புரமெரி
யிட்ட சிவன்குருவே
கிரித்தலை வாமரு தக்குன்றம்
கின்றருள் கேடிலியே,
(73)

கேடிலி தோற்ற மிலியவு
ணர்க்குக் கிழமையிலி


71. வாழவும் சாரவும் அருள். சுகம்-கிளி. சுடர்பவன். ஒளிவீசுபவன். . . . . . . . . . *

72. சுடரில்-விளக்கில்,