பக்கம்:முருகன் அந்தாதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

போயநன் னீரென வாழ்க்கையைப்
போக்கும் புலையனெற்கு
நீயரு ளாய்மரு தாசலக்
கோயில் நிமிர்ந்தவனே.
(76)

நிமிர்ந்துநிற் பார்யமன் முன்னர்ப்
பிறவிக்கு நெஞ்சழியார்
சுமந்த வினையால் துயரமு
றார் இன்பச் சூழலுக்குள்
அமைந்திருப் பார்மரு தாசலம்
மேய அறுமுகனை
இமிர்ந்த கடம்பணி தோளனை
நண்ணி இறைஞ்சினரே.
(77)

இறைஞ்சித் திருப்புகழ் பாடி
உருகிநைந் தேத்தியுள்ளம்
நிறைஞ்சொத்த சாந்தியி னிற்பதே
இன்பம் நினை மறவா
துறைந்திடும் வாழ்வே அழியாத
வாழ்வுனை ஒன்றிநின்று
மறைந்திடு தல்முத்தி மாமரு
தாசலம் வாழ்பவனே.
(78)


76. துரிசு-குற்றம்

77.இமிர்ந்த-வண்டுகள் ஒலிக்கின்ற.

78.கிறைஞ்சு - நிறைந்து மறைந்திடுதல் ஒன்றாகக் கரைதல்.