பக்கம்:முருகன் அந்தாதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கரனா றிரண்டனை நன்மரு
தக்குன்றிற் கண்டனனே. (81)

கண்டனை யான்செங் கரும்பனை
யான்தேன் கடலனையான்
உண்டறி யாத அமுதனை
யான்னனே ஓங்கருளில்
பண்டறி யாத படிபதித்
தான்இனிப் பைதலுண்டோ?
வண்டறி யாத கடம்பன்
மருத மலேயரசே. (82)

மலையர சன்விண் ணகவர
சன்றமிழ் மாமொழியின்
நிலையர சன்வள்ளி வாழ்த்தர
சன்மறை நீண்டுபுகழ்
கலையர சன்மரு தாசலன்,
நற்குடி காண் இனியான்
அலைவு பெறேனுன்கைப் பாசத்தி
லனாலீ தறிநமனே. (83)
நமரென்று பாரினில் யாவாை
யோகொண்டு நாடும்நெஞ்சே
தமரென் றவரை அடைவத
ணாற்பயன் சற்றுமிலை


81. பரணர் கிரி-திருப்பரங்குன்றம். அலேவாய்-திருச்செந்தூர், வரன்-மேன்மை, வனமலே-பழமுதிர் சோல் மலே. திரன்ஆர-கிலேகொள்ளும்படி கரன்-கரம்.

82. கண்டு அனயான் கற்கண்டைப் போன்றவன். பைதல் - துன்பம். 83. குடி குடிமகன். -