பக்கம்:முருகன் அந்தாதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

குமரன் மருத மலைக்குழ
கன்திருக் கோலவடிக்
கமரும்அன் பர்தமை யேயுற
வாக அடைகுதியே. (84)

குதித்து வருமயில் மேலேறி
வந்து குறுகிஎனை
மதித்தாண்டருள்தரும் காலமுண்
டோமறை மாமுனிவோர்
துதித்து வணங்கிடும் நாயக
னேசுரர் - சூழ்மணியே
கதித்த வளங்கொள் மருதா
சலத்துக் கலந்தவனே. (85)

கலந்திகழ் மேனி அரிவையர்
பாற்கொண்ட காமமுழங்
தலந்தது போதும்நின் தூய
திருவெழி லாருருவை
மலந்தப நெஞ்சினில் வைத்துத்
தியானித்து மாண்புபெறும்
நலந்தரு வாய்தண் மருத
மலைப்பதி நாயகனே. (86)


84.நமர்-கம்மவர். தமர்-சுற்றத்தார். குழகன்-இளையவன்.

85.மதித்து - ஒரு பொருளாக எண்ணி. சூழ்-வலஞ்- செய்யும். கதித்த-மிக்க.

86.கலம்-ஆபரணம். அலந்தது.ஏங்கியது. தப-போக