பக்கம்:முருகன் அந்தாதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

நாயடி யேனுனை நாதனென்
றெண்ணி நயந்துவந்தேன்
நீயடி யானென ஏன்றுகொண்
டாலது நிச்சயமாம்
தாயடி மேவுங் குழந்தைபோல்
ஏங்கித் தளருகின்றேன்
மாயவ னார்மரு காமரு
தாசலம் வாழொளியே. (87)

ஒளியார் சுடர்க்கும் ஒளிதங்
தனைபுவி ஊறுபுனல்
குளியாரத் தண்மை யளித்தனை
பாரிற் குடிபெறவே
நளியார் உயிர்களே நாட்டினை
ஏழைக்குன் நற்கருணை
அளியார வைத்திலை என்மரு
தாசலத் தாண்டவனே. (88)

ஆண்ட தலைவன் அடிமையைப்
பாரா தயர்ந்தனனேல்
வேண்டு வதைத்தந்து காப்பவ
ரார்இந்த மேதினியில்
ஆண்டவன் நீயன்றி மற்றவர்
காப்பரென் றண்டிலன்யான்
தூண்டரு சோதி மருத
மலைக்குட் சுடர்விளக்கே. (89)


87.நிச்சமாம்.உறுதியாகும்.

88. குளி ஆர-குளித்தல் கிரம்பும்படி களி ஆர்.செறிவாக உள்ள அளி-அன்பு என்-என்ன காரணம்.

89. அயர்ந்தனனேல்-மறந்தானைல், தாண்ட அரு; தொகுத்தல் விகாரம்