பக்கம்:முருகன் அந்தாதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

விழைதல் வெறுத்தல் இரண்டற்ற

ஞானியர் மேவுமிராத்

தழையும் பகலின்றி ஒங்கும்

நிலத்திற் றணியிருப்பார்

குழையுமன் பில்லாக் கொடியன்

எனக்கது கூடுவதோ

மழையொன்று சோலே திகமும்

மருத மலேமருந்தே. (96)


மருந்தும் பிணியும் விதியும்

மதியும் மரணமும்பார்

திருந்திய வாழ்வும் இடரும்

சுகமும் தெரியகிலா

தருந்துமெய் யின்ப அநுபவம்

கூட அருள்தருவாய்

விருந்தெனும் காட்சி தருமரு

தாசல மெய்ப்பொருளே. (97)


பொருளாய்ப் பொருள்தரு போகமு

மாயென்றன் புத்திவரு

தெருளாய்த் தெருளில் திகழின்ப

மாய்த்தவம் தேடிலர்க்கு

96. இராவும் பகலும் இன்றி கேவல சகலங்கள் இன்றி.

மழைமேகம். ஒன்று-சேர்ந்த

97. விருந்தெனும் கண்ணுக்கு விருந்தென்று சொல்லும்