பக்கம்:முருகன் அந்தாதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மருளாய் மருளில் இருளாய்

இலகும் வடிவழிகா

அருளாய் எனகின் மருதா

சலத்தை அணுகுவனே. (98)


அணுக அரியது சுட்ட

அரிய தளவைகளால்

துணிய அரியது கெஞ்சிற்கெட்

டாதது தூமறையும்

நணுக அரிய தெனச்சொல்

பிரமமே நாம்பணிய

அணிய தெளிய தெனமரு.

தாசலத் தாரமுதே. (99)

தேற்றுங் குமாரன் நமையாள

வந்து திருவுருக்கொண்

டாற்று மருட்செயல் மாமரு

தாசலத் தஃதறிந்து

நாற்றிசை ஏத்தும் திருச்சக்

நிதிஎய்தி நாடிகின்று

போற்றினம் துன்பினி இன்றம்

துணையவன் பூங்கழலே. (100)

98. தெருள்-தெளிவு. மருள்-மயக்கம்.

99. நனுக அடைய. அணியது - சமீபத்தில் உள்ளது. மருதாசலத்தில் ஆரும் அமுது,

100. அருட்செயல் ஆற்றும். ஆற்றும் செய்வான். மருதாசலத்தில் ஆற்றும்.