பக்கம்:முருகன் அந்தாதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகனே துணை
மருதமலை முருகன் அந்தாதி
காப்பு

குருதமர் தந்தை அனையென
நிற்கும் குமரன் அடல்
விருதமர் அற்புத வேலன்
எழிற்கொங்கின் மேவுமெழில்
மருத மலைக்குகன் பாதத்தில்
அந்தாதி வாய்ப்பச்செயும்
கருதம ரர்க்கருள் பானை
முகத்தன் கருணையதே.

நூல்

பூங்கடம் பந்தார் புனைமார்பன்
வேலன் பொருதசுரர்
தோங்கடந் தான் என் உளங்குடி
கொண்ட சுடருருவன்
பாங்குறு வள்ளி மணவாளன்
என்று பணியநின்றான்
தீங்கடும் மாமரு தாசல
மென்னும் சிகரியிலே.

(1)


(காப்பு) தமர்-சுற்றத்தார். அடல் விருது-வெற்றி அடையாளம், கொங்கில்-கொங்கு நாட்டில். கருணையது: அது, பகுதிப் பொருள் விகுதி. கருணை வாய்ப்பச் செயும்.

1. தோம் கடந்தான்-தீமையை வென்றான், தீங்கு அடும் - பாவத்தைப் போக்கும், சிகரி-மலை.