பக்கம்:முருகன் அந்தாதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கரிமா வதனற்குத் தம்பி
உமைதரு காதலன் அவ்
வரிமா மருகன் புரமெரித்
தோனுக் கரியமைந்தன்
தெரிமா மறைக்கும் அரிய
இராசியச் சித்துருவன்
எரிமாயை நீக்க மருத
மலையில் இருந்தனனே.

(2)


இருந்தும் கிடந்தும் வினைசெய்தும்
நின்றும் எனதுளத்திற்
பொருந்தும் படிவைத்தேன் மாமரு
தாசலம் போந்தகுகன்
திருந்தும் கமலத் திருவடி;
ஆதலின் சேருமின்னல்
வருந்தும் படிக்கெனை வாட்டா
தெனுந்திடம் மன்னினனே.

(3)


மன்னுவ தென்றுமுன் றன்கரு
ணைச்செல்வம் வாய்த்ததுணை
மின்னும்நின் வேலும் மயிலும்
எனக்கெது வேண்டும்.அது


2. காதலன்-பிள்ளை. அரி - திருமால். இராசியம்-இரகசியம்.

3. திருவடி வைத்தேன்; ஆதலின் திடம் மன்னினன் 3.