பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

விட்ட அரபியரது அந்தக் கலங்கள், இந்திய சமுத்திரத்தின் மேற்கு கரையில் அமைந்திருந்த ஆப்பிரிக்க நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கும் சென்றன. ஒன்பது பத்தாவது நூற்றாண்டுகளில் பாக்தாதில் இயங்கி வந்த இஸ்லாமியப் பேரரசின் வளர்ச்சியும் விரிவும் இத்தகைய உலகம் அளாவிய வணிக எழுச்சிக்கு உறுதிமிக்க பீடமாக விளங்கியது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாக விளங்கிய அலக்ஸாந்திரியாவைப் போன்று உலக வாணிபத்தின் உயிர்நாடியாக அப்பொழுது பாக்தாது விளங்கியது. அராபிய வர்த்தகர்கள் கிழக்கையும், மேற்கையும் அல்லாமல் மத்திய கடல் பகுதியையும் தங்கள் வணிக வழியில் இணைத்தனர். ஸ்பெயின், சிசிலி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் வணிக வழிகள் சென்றன.[1] இதன்காரணமாக ஐரோப்பிய நாடுகள், சீன, இந்திய, ஆப்பிரிக்க, நாடுகளது கிராம்பு, ஏலக்காய், அம்பர், கஸ்தூரி, கருவாய்ப்பட்டை, மிளகு, கற்பூரம், முத்து, மஸ்லின், பட்டு, சந்தனகட்டை ஆகிய பொருட்களைப் பெற்றதுடன் இஸ்லாமிய நாடுகளது ஆரஞ்சு, லெமன், அப்ரி காட், ஆகிய பழங்களும், பினாஷ், ஆட்டிகோஸ், போன்ற காய்கறிகள், இரத்தினக் கற்கள், இசைக் கருவிகள், காகிதம், பட்டாடைகள், ஆகிய பொருட்களையும் பெற்றன. அண்மைக் காலங்களில் ருஷ்யாவின் பல பகுதிகளிலும், பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏராளமான இஸ்லாமியர்களது நாணயங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் பதினேழாவது நூற்றாண்டு வரையிலான அராபியரது சிறப்புமிக்க வாணிபச் செழுமையைப் பறை சாற்றுவதாக உள்ளன.[2] மேலும், ஐரோப்பிய நாடுகளில் அராபியரது வணிக மரபுகளும், வாணிபச் சொற்களும் அந்தந்த நாடுகளின் சமூக, மொழி இயல்களில் ஊடுருவி, இன்றுவரை அவை நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக காசோலையைக் குறிக்கின்ற அராபியச் சொல்லான “ஷீக்” ஆங்கிலத்தில் “செக்” என மாற்றம் பெற்றுள்ளது. இதனைப் போன்று ஜெர்மனியிலும், ஹாலந்திலும், காசோலையைக் குறிக்க அரபு


  1. பிறையன்பன் - கலையும் பண்பாடும் (இலங்கை 1962) பக் : 87 - 88
  2. பிறையன்பன் - கலையும் பண்பாடும் (1962) பக் : 93