பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

வாழ்க்கை, சமயத் தொண்டிற்காவே, நமது தமிழகத்தில், அர்ப்பணிக்கப்பட்டு இருப்பதும் அதற்குச் சான்றாக அவர்களது அடக்கவிடங்கள் முறையே மகமூது பந்தர் என்ற பரங்கிப் பேட்டையிலும், சஹீதுபந்தர் என்ற கோவளத்திலும் அமைந்திருப்பது அரபுநாட்டிற்கும் தமிழகத்திற்கும் நல்ல பிணைப்புகள் இருந்ததை நினைவூட்டுகின்றன. அவர்களைத் தொடர்ந்து பல்லாயிரம் அராபியத் தொண்டர்களும் சமயச் சான்றோர்களான வலிகள், சூபிகள், தர்வேஷ்கள், மஜ்தூபிகள், மஸ்தான்கள் சமயப் பணிக்கென தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் வந்து சேர்ந்தனர். தொண்டை மண்டலத்தில் இருந்து தென்பாண்டி நாடுவரை தொடராக அமைந்துள்ள கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து இங்குள்ள மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களது பணியில் தங்கள் வாழ்க்கையை முடக்கிக் கொண்ட அவர்களது அடக்கவிடங்கள் கோவளத்தில் இருந்து குளச்சல் வரை காணப்படுகின்றன. குமரி மாவட்டத்தின் கோட்டாறு நகரில், ஈராக் நாட்டு கர்ஸிம் (வலி) அவர்களது அடக்கவிடம் உள்ளது. அதில் ஹிஜ்ரி 4 (கி.பி.624) என்று குறிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கோதரிஸா மலையில் உள்ள அப்துல் ரஹ்மான் (வலி) அவர்களது அடக்கவிடத்தில் ஹிஜ்ரி 8 (கி.பி. 628) என பொறிக்கப்பட்டுள்ளது.[1] அண்ணல் நபிகளார் அவர்கள் காலத்திலேயே திருமறையின் ஒளியை ஆர்வத்துடன் தமிழகத்திற்கு ஏந்தி வந்த இறைநேசர்களின் முதல் அணியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதில் ஐயமில்லை. மற்றும் திருச்சிராப்பள்ளியில் நத்தர் பாபா, மதுரையில் அலியார் ஷா, ஏறுபதியில் சுல்தான் ஸையது இபுராகீம் ஸஹீது, அனுமந்தக் குடியில் ஸையது முகம்மது புகாரி: தேவிபட்டினம் வையது அஹமது, ஆகியோர்களது தர்காக்கள் அமைந்து இருப்பது பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை, சன்மார்க்க சேவைக்காக அரபு நாடுகளில் இருந்து தமிழகம் போன்று தங்களது தொண்டின் முடிவில் தமிழ் மண்ணில் தங்களை மறைத்துக் கொண்ட இறைநேசர்களில் குறிப்பிடத் தக்கவர்களாகும்.

இன்னும், ஸிரந்திப் என அன்று வழங்கப்பட்ட இலங்கையில் உள்ள ஆதம் (அலைஹிவஸல்லம்) அவர்களது திருவடி


  1. 1. அப்துல் ரஹீம் எம்.ஆல்.எம். – இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (1974) தொகுதி 1. பக்கம்.