பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பெருக்கியதுடன், ஈழத்தின் வடக்கு, வடகிழக்கு, தெற்குப் பகுதிகளில் – திருக்கோணமலை, யாழ்ப்பாணம், மாதோட்டம், மன்னார், புத்தளம், கொழும்பு, வேருவிளை, காலி ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்களது முதலாவது குடியிருப்புகளை நிறுவினர். இவர்கள் ஈழத்தின் முத்துக்களையும் மணிகளையும் பெற்றுக் கொண்டு, தங்கள் நாட்டு தங்கம், செம்பு, பட்டு, மட்கலங்கள், குதிரைகள் ஆகியவைகளைப் பண்டமாற்றில் வழங்கியதாக வரலாற்று ஆசிரியர் நிக்கோலஸ் பரணவிதான குறிப்பிட்டுள்ளார்.[1] இன்னொரு நூலாசிரியரான ஜட்ஜ் காசி செட்டியும் இலங்கை முஸ்லீம்களைப்பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள் முதலில் குமரிமுனைக்கு கிழக்கே உள்ள காயல்பட்டினத்தில், எட்டாவது நூற்றாண்டில் குடியேறிய பின்னர் இலங்கைக்கு வந்ததாக வரைந்துள்ளார். இந்த ஊர் முன்னால் சோனகர் பட்டினமாக வழங்கி வந்ததாக டாக்டர் கால்ட்வெல் குறிப்பிட்டுள்ளார்.[2]


  1. Nicholos and Paranamitana - Concise History of Ceylo (1961) p. 253
  2. Yule. col. 4. The Book of Ser Marcopolo-vol. II (1871) р, 307. 309. Tamil nadu Archives - Tinnevely Dist. Records vol.3570. 1809 & 23–1–1810.