பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


4

சோனகர்


இவ்விதம் தமிழகம் போந்த இஸ்லாமிய அரபுகளை துருக்கர் என அழைப்பதுடன் சோனகர் என அழைக்கும் வழக்கமும் வந்தது. வில்லியம் லோகான் என்ற ஆங்கில நூலாசிரியர், யவனக என்ற சொல்தான் சோனகராகி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.[1] “யோனா” என்ற பிராகிருதச் சொல்லின் மூலமாக பிறந்தது சோன என்றும், அத்துடன் தமிழ் “க” விகுதி சேர்ந்து “சோனக” என தமிழ் வடிவம் பெற்றுள்ளது என தமிழக தொல்பொருள் துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.[2] ஆனால் கி.மு. மூன்றாவது நூற்றாண்டில் இருந்த சோனகர் என்ற பெளத்த பிக்குவின் குறிப்பை மகாவம்சத்தில் படிக்கும்பொழுது, பாலி மொழி இந்தச் சொல்லுக்கு மூலமாக இருக்கலாம் என்பதும் சிந்திக்கத்தக்கதாக உள்ளது.[3] ஆதியில் இந்தச் சொல் எட்டாவது நூற்றாண்டு முதல் இசுலாமிய அரபியர்களைத் தான் குறித்து வந்துள்ளது. பொன்னுக்கு “சோன” (சொர்ண) என்ற பெயரும் உண்டு. “பொன்னொடு வந்து கறியோடு பெயரும்” பண்ட மாற்று முறையில் பொன்னைக் கொண்டுவந்து, தமிழக கை வினைப் பொருட்களை பெற்றுச் சென்ற காரணத்தினாலும் அவர்கள் சோனகர் என வழங்கப்பட்டு இருக்கலாம். பதினொன்றாவது நூற்றாண்டு முதல், இந்தச்சொல் தமிழ் வழக்கில் இருந்ததை ராஜராஜ தேவனது தஞ்சைப் பெருவுடையார்


  1. William Logan - Malabar Manual (1881)
  2. Nagasamy, Dr. R. South Indian Studies Vol. I. (1978)
  3. Mahavamse—Dr. Geiger (Colombo. 1960) Chap. V. page : 114