பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ரோஜா இதழ்கள்

“அழலே மாமா, நீங்க வந்தது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. நெஞ்சம் தழுதழுத்துக் குழம்புகிறாள். “மாமா, உங்களை நமஸ்காரம் பண்ண மறந்துட்டேனே ? அப்படியே நில்லுங்கோ...” என்று விழுந்து பணிகிறாள்.

“தீர்க்க சுமங்கலியா, அமோகமா வாழ்ந்திண்டிரம்மா. ரெண்டு பேரான்னா பண்ணனும் ?”

தடைபட்ட நீர் கரகரவென்று கன்னங்களை நனைக்கிறது.

“காப்பி ஆறிப்போறது. சாப்பிடுங்கோ மாமா.”

“இந்தா, நீ சாப்பிடு.”

“எனக்கு இருக்கு மாமா, இப்பத்தான் நான் சாதமே சாப்பிட்டேன். இங்கே இருப்பு நிலையில்லே. கோயமுத்துரர் ஸ்டுடியோவில் புதுப் படத்துக்குப் பாட்டு எழுதப் போறதா இருக்கார். அதனால, இப்படி சாமான் சட்டெல்லாம் இல்லாம இருக்கோம்.”

“அதுக்கென்னம்மா? ஓட்டல்ல வாங்கிச் சாப்பிட்டுட்டு ஹாயா இருக்கற காலம்தானே இப்ப?...” என்று சிரிக்கிறார். ஜாங்கிரியையும் மிக்ஸ்சரையும் மாறி மாறி ரசித்துச் சாப்பிடுகிறார்.

“மாமி செளக்கியமா, மாமா ? சுந்து எப்படி இருக்கிறான்? பிரேமா இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.ஸியா?”

“எங்கே? போன வருஷம் பரிட்சை சமயத்திலே டைபாயிடாப் படுத்துண்டு தங்கிட்டாளே? உன் மாமிக்குத் தான் ப்ளட்பிரஷர். மட்றாஸ்-க்கு வந்து வைத்தியம் பண்ணிக்கணும்னு சொல்லிண்டிருக்கா. அடுத்த மாசம் மறுபடியும் கோர்ட்டுக் காரியமா வரச்சே அவளையும் கூட்டிண்டு வந்து ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டணும்.”

அந்தக் கணத்தில் மாமியை அழைத்துவந்து விடுவாரோ என்ற திகில் கவ்வுகிறது. “அதான். இன்னிக்கே ஒரு கால் கிளம்பவேண்டி இருந்தாலும் இருக்கும்னு சொல்லிட்டுத்தான் போனார்..” என்று முன்னணை போட்டு வைக்கிறாள்.

“ஏதோ இருக்கட்டும். நீதான் அமோகமாக இருக்கப் போறே...” என்று சொல்லிக் கொண்டே மாமா எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/16&oldid=1115313" இலிருந்து மீள்விக்கப்பட்டது