பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ரோஜா இதழ்கள்

“அதெல்லாம் எதுக்கு மாமா இப்ப? நீங்க சித்தமுன்ன சொன்னாப்போல, எனக்கு நல்ல காலம் வரச்சே, நானே எல்லாம் வாங்கிப் போட்டுக்கறேன்.”

“அதுக்காக? கல்யாணம்னு பண்ணிக் குடுத்தா உன் பங்குக்குப் பத்தாயிரம் செலவழிக்க வேண்டாமா?”

“...”

“அதை நீ கேக்கலியா?”

“அதைக் கேட்க எனக்கு வாயில்லையே மாமா ?”

“அடி அசடு ? உங்கப்பா, கட்டின பெண்டாட்டியையும் பெண் குழந்தைகளையும் விட்டுட்டுக் கடைசி காலத்திலே எவளையோ புடிச்சிண்டு ரெண்டு லட்சம் ஆஸ்தியையும் அவளுக்குத் தாரை வார்த்துட்டுப் போனப்ப, கம்பெனி டைரக்டரெல்லாம் சேர்ந்து இரக்கப்பட்டு அஞ்சும் பத்துமா அறியாமல் நின்ன உங்க மூணுபேருக்கு மட்டும் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்யாணத்துக்குன்னு கொடுத்தாளே, அதை நீ கேட்க வேண்டாமா?”

மைத்ரேயிக்கு இது கேட்காத புதுமையாக இருக்கிறது. அவளுக்குத் தாயாகும் வயசுக்கு மூத்த அக்கா, அம்மையையும் அப்பனையும் துடைத்து வாயில் போட்டுக் கொண்டதற்காக அவளைத் திட்டிக் கொட்டித்தான் அறிந்திருக்கிறாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, மாமா...”

“தெரியாதா? அவா ரெண்டுபேருக்கும்தான் அந்தப் பணத்தைச் செலவழிச்சு நல்ல இடமாகப் பார்க்காமல் வஞ்சகம் செய்தாள். உன்பங்கு முழுசுமே விட்டுவிடுவதா? அடி அசடு! உன்னோட அவன் கிட்டச்சொல்லி கேஸ் போடச் சொல்லு!...”

“சரி, மாமா...”

“கூடப் பிறந்த பிறப்புக்கே துரோகம் செய்யத் தோணுமா? நான் அன்னிக்கே உங்களை எல்லாம் இவகிட்ட காட்டிக் குடுக்காம கூட்டிண்டு போயிருப்பேன். எங்கிட்ட வந்திருந்தா இப்படி எல்லாமா நேரும்? ஒருத்தொருத்தியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/18&oldid=1123715" இலிருந்து மீள்விக்கப்பட்டது