பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ரோஜா இதழ்கள்

“ஆமாம் கண்ணு, நல்ல சரக்கா நம்ம தோஸ்த் வாங்கிக் குடுத்தாரு...”

“ஐயோ, மோசம் போனேனே நான்...” என்று விம்மினாள் மைத்ரேயி,

“அழுவாதே கண்ணு, அழுவாதே. உனக்கு சேலை ஜாக்கெட்டு, ரிப்பன் எல்லாம் வாங்கித் தருவேன். நீ ஒசந்த குலத்துப் பொண்ணாச்சே, எனக்குத் தெரியாதா?”

“போதும் வாயை மூடிக்கிங்க!”

“என் ராசாத்திக்குக் கோபம் வருது. கோச்சுக்காதேடி கண்ணாட்டி- பிதற்றிக் கொண்டே தூங்கிப் போனான்.

பொழுது விடியாமலிருந்து விடிந்தது. அவள் தேநீரை வைக்க எழுந்திருக்கவில்லை. சர்க்கரையில்லை; காசில்லை பாலுமில்லை.

கூரை முகட்டைப் பார்த்துக் கொண்டு கிடந்தாள். பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாம். காதல் மட்டும் இருக்குமா? சே! இந்த உடம்புச் சுகம் இவ்வளவு பெரிய வழுக்குப் பாறையா?

இவனைப் பார்க்கவும் இப்போது பிடிக்கவில்லையே? ஆனால் அவள் இங்கிருந்து தப்பி எங்கே, எப்படிப் போவாள்? தோற்றுப் போய் மீண்டும் அக்காவின் புகலிடத் துக்குப் போவதா?

சே! சுருக்கிட்டுச் கொண்டு மடியலாம். உத்தரத்தில் புடவையைக் கட்டி...

அவன் விழித்துக் கொண்டு அவள் முகத்தைத் திருப்புகிறான். அவள் தள்ளினாள்.

“கோச்சிட்டியா மைத்தி...?”

சட்டென்று நினைவு வந்தாற்போல் சட்டையின் உட் பையில் கைவிட்டான். இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்கள் வந்தன.

“இந்தா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/30&oldid=1099703" இலிருந்து மீள்விக்கப்பட்டது