பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

29

“நீங்க இவ்வளவு மோசமாயிருப்பீங்கன்னு நான் நினைக்கலே” என்றாள் கண்ணீர் நிரம்பித் தளும்ப.

“என்னை மன்னிச்சிடு மைத்தி. என் உயிரே, என் ஒளியே என் வழிகாட்டியே, என்னை மன்னிச்சுடு. அந்தப் பனாதைப் பயல்கள் காசு தென்பட்டிச்சின்னா இப்படித் தான். சில சமயம் இந்தச் சினிமா உலகமே வேணாம். எங்கேனாலும் போயிடாலான்னுத் தோணும்...” உலகில் ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கேற்ற பிணிப்புக்கள் இருக்குமோ என்று மலைத்தாள்.

“எனக்கு வழியே இல்லீங்க வேறு...”

அவன், அவள் வாயைப் பொத்தினான்.

“அப்படிச் சொல்லக் கூடாது, நமக்கு நல்லகாலம் நிச்சயம் வரப்போகுது. இன்னிக்குப் பாரு, நான் வெளியே போகப் போறதில்லே. இந்திரா கபேயில் எடுப்புச் சாப்பாடு, ஸ்வீட், காரம், கூல்ட்ரிங், கதம்பம், ரோஜா, சினிமா...”

இவைதாம் வாழ்வு என்று அவன் சொன்னாற் போலிருந்தது.

இவையே வாழ்வென்று ஏறி ஒரு விநாடியில் வழுக்குப் பாறையில் சறுக்கி விழுவதும், திரும்பி அண்ணாந்து பார்த்து பசித்த வயிற்றை அமுக்கிக்கொள்வதுமான ஒரு...

“ஏங்க்கா, யோசனை பண்ணிட்டிருக்கீங்க?”

“ஹ்ம்... இல்லே லட்சுமி. இந்தா, காரப் பொட்டலம், நீ சாப்பிடு.”

“நீங்க ஒண்ணுமே சாப்பிடாம எனக்குக் குடுக்கிறீங்களே அக்கா?”

“எனக்குப் பசியே இல்லே லட்சுமி!”

“ஏங்க்கா?”

பசியே இல்லை என்றால் என்ன பொருள் என்று அவளுக்கு விளங்கவில்லை.

“நீ கொஞ்சம்னாலும் எடுத்திட்டு குடக்கா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/31&oldid=1099705" இலிருந்து மீள்விக்கப்பட்டது