பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

acc

2

acc


பட்ட மாற்று உண்டியல் 3) ஒரு கோரிக்கையின் நிபந்தனைகளுக்கு உடன் படல் பா, non - acceptance.

acceptance credit – ஏற்புவரவு: அனைத்துலக வணிகத்தில் பொருள்களை விற்பதற்குப் பணம் வழங்கும் முறை. வணிக வங்கியின் மூலம் இறக்குமதியாளருக்கும் ஏற்றுமதியாளருக்குமிடையே இது நடைபெறுவது.

acceptance supra protest, acceptance for honour – மறுப்பின் பேரில் ஏற்பு: ஒரு மாற்றுண்டியல் மறுக்கப்பட்ட பின், அதை அளிப்பவர், ஏற்பவர் ஆகிய இருவரின் நன்மதிப்பைக் காப்பாற்ற ஏற்கப்பட்டுப் பணம் வழங்கப்படுதல். நாணய ஏற்பு என்றும் கூறலாம்.

accepting house - ஏற்பில்லம்: மாற்று உண்டியல்களை ஏற்று உறுதியளிக்கும் நிறுவனம். ஏற்பகம் எனச் சுருக்கலாம்.

acceptor - ஏற்பாளர்: மாற்று உண்டியலை ஏற்றுப் பணம் பெறுபவர்.

accommodation bill - பணவசதி உண்டியல்: காப்புறுதியாளராகச் செயல்படும் ஒருவர் கையெழுத்திடும் மாற்றுச்சீட்டு.

account - கணக்கு: 1) விலைப் பட்டி. 2)வணிக நடவடிக்கைகளைப் பதிதல். 3) வங்கிவைக்கும் பற்று வரவுக் கணக்கு. 4) ஒரு முகமையகத்திலிருந்து அதன் வாடிக்கையாளர் பெறும் கழிவு. 5) ஆண்டுக் கணக்கு

accountancy – கணக்குப் பதிவியல்: கணக்கு வைப்புக் கலை.

accounting, benefits of - கணக்குப் பதிவியலின் நன்மைகள்: 1) இது நம்பகமான பதிவு. 2) இலாப நட்டத்தைக் கணக்கிட முடிகிறது. 3) நிலுவைகளைக் கணக்கிட இயலுகிறது 4) சொத்துகளைக் கண்காணிக்க முடிகிறது. 5) நிதி நிலையை அறிய முடிகிறது.

accountant - கணக்கர், கணக்குப் பிள்ளை: ஒரு வணிக நிறுவனத்தின் வரவு செலவுகளை நாட்குறிப்பேட்டில் எழுதுபவர். அவை தொடர்பான அனைத்தையும் செய்பவர். பட்டயக் கணக்கர், சான்றிடப்பட்ட கணக்கர், நிதிநிலைக் கணக்கர், மேலாண் கணக்கர் என இவர்கள் பல வகைப்படுவர்.

account book – கணக்கேடு: கணக்கு வைக்கும் புத்தகம்.

account day, settlement day - கணக்குப் பார்க்கும் நாள்: முந்தைய கணக்கு நடவடிக்கைகளை எல்லாம் முடிவு செய்யும் நாள்.