பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

acc

4

acc


திற்கு மாற்ற அடிப்படையில் கணக்குகள் தயாரித்தல்.

4) அறிவாண்மைக் கருத்து: ஆதாயத்தையும் இழப்பையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு அடிப்படையில் தயார் செய்யப்படுங் கணக்கு.

accounting convention — கணக்குப் பதிவியல் மரபு: நடப்பு ஆண்டில் செய்யப்படும் கடன் விற்பனைத் தொடர்பான செலவுகள், இழப்புகள் ஆகியவை அடுத்த ஆண்டுக் குரியன என்றாலும் அவை நடப்பு ஆண்டிலேயே எழுதப்பட வேண்டும்.

accounting cost – கணக்கிடும் செலவு: பா. cost.

accounting cycle – கணக்கு, வைப்புச் சுழல்: பா. business cycle.

accounting period – கணக்கு வைக்கும் காலம்: இது ஆண்டுக்கு ஒரு தடவையாகும். பொதுவாக, ஏப்ரலிலிருந்து மார்ச் முடிய 12 மாதங்களுக்குரிய காலம்.

accounting rate of return, ARR - புள்ளிவிவரக் கணக்கிடு வீதம்: முதலீடு செய்யப்பட்ட இருப்புகளின் கணக்கீட்டு மதிப்பை விழுக்காடாகத் தெரிவித்தல். அதாவது, ஒரு முதலீட்டிலிருந்து எதிர்பார்க்கப்படும் நிகர ஆதாயம் ஓ. net present value,

accrual, accrued charge — ஆகும் கட்டணம்: குறிப்பிட்ட காலத்தில் கட்டணமாக உண்டாகும் தொகை. ஆனால், அக்காலத்திற்குள் செலுத்தப்படாதது. எ-டு. கடந்த இருமாத மின் கட்டணம்.

accrued concept – ஆக்கக்கருத்து: முதன்மையாகக் கணக்கு வைக்கும் கருத்துகள் நான்கில் ஒன்று. நல்ல கணக்கு வைக்கும் பயிற்சி இதனை மையமாகக் கொண்டது.

accrued benefits – ஆக்கநன்மைகள்: ஓய்வூதியம் காரணமாக ஒருவர் பெறும் நலங்கள்.

accrued interest– ஆகும் வட்டி.: கூடும் வட்டி. பொதுவாகச் சேமிப்புத் தொகைக்கு ஏறும் வட்டி.

accumulated depreciation – தொகு தேய்மானம்: ஓர் இருப்பின் மதிப்பிலிருந்து நீக்கப்படும் முழுத்தொகை. இவ்விருப்பு ஈட்டப்பட்ட நாளிலிருந்து ஒவ்வோராண்டும் செய்யப்படுவது.

a.dividend – தொகுபங்கு ஈவு. ஒரு நிறுமத்தின் முன்னுரிமைப் பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்படாத ஈவுத் தொகை. ஆகவே,