பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

air

7

amor


தொழில், காப்புறுதி, போக்குவரத்து.

air consignment note - வானப் போக்குவரவு அனுப்பீட்டுக் குறிப்பு: பா. airway bill.

air freight – வானவூர்திக் கட்டணம்: வானக்கலத்தின் மூலம் சரக்குகளை அனுப்புவதற்குரிய கட்டணம்.

air time - பரப்பு நேரம்: 1) தொலைக் காட்சி அல்லது வானொலியில் விளம்பரத் திற்காக ஒதுக்கப்படும் நேரம் 2) வானொலி அல்லது தொலைக்காட்சியில் விளம் பரத்தைப் பரப்புவதற்குரிய நேரம்.

airway bill – வான வழிப் பட்டியல்: கட்டணம் செலுத்தி வானவூர்திமூலம் ஒருவர் சரக்குகளை அனுப்பும் ஆவணம்.

allocation – ஒதுக்கீடு: பங்கு ஒதுக்கீடு. செலவு ஒதுக்கீடு.

allonge – உண்டியல் ஒட்டு: மாற்று உண்டியலில் இணைக்கப்படுவது. கூடுதல் மேலொப்பம் செய்ய இதில் இடம் இருக்கும்.

allotment – பங்கு ஒதுக்கீடு: முன்னரே வழங்கப்படாதிருக்கும் பங்குத் தொகைகளை முறையாக வழங்கும் ஏற்பாடு.

allottee - பங்கு ஒதுக்கப் பெற்றவர்: பங்குக்குரியவர். உண்டியல் ஒட்டு: உண்டியலில் கூடுதல் இதில்

allowance – படி; வரி விதிவிலக்குத் தொகை. குறிப்பிட்ட வரியைக் கணக்கீடு முன் இதைக் கழிக்க வேண்டும் எ-டு. அகவிலைப்படி.

all risks policy – அனைத்திடர்முறிமம்: காப்பீட்டுமுறி, பல இடர்களுக்கு எதிராகத் தனி உடைமைகளைக் கணக்கில் கொள்வது. அதில் அணிகலன்கள், புகைப்படக்கருவி, மின்னணுக்கருவி முதலியவை அடங்கும்.

alphabetical filing – அகர வரிசைக்கோப்பு: உயிரெழுத்து மெய்யெழுத்து நிரல்படிக் கோப்புகளை அடுக்குதல்.

alternation of share capital — பங்கு மூலதன மாற்றம்: ஒரு நிறுமத்தின் அனுமதிக்கப்பட்ட மூலதனத்தில் கூட்டுதல் குறைத்தல் முதலிய மாற்றங்களை வரையறைகளுக்கு உட்பட்டுச் செய்தல்.

amalgamation – இணைப்பு: இரண்டடிற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒன்றாக்கல் பா. merger.

amendment of act – சட்டத்திருத்தம்: இன்றியமையா மாற்றம் வேண்டும் பொழுது இது செய்யப்படுவது.

amortization – கடன் தீர் நிதிச்சேர்ப்பு: ஒழுங்காகப் பணத்தை ஒதுக்கிக் கடனை அடைத்தல்.