பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

amo

8

ann



amount – தொகை: பட்டியல் தொகை. ரூபாயும் காசும் கொண்டது.

amounts differ – தொகை வேறுபடல்: மாற்றுண்டியல் அல்லது காசோலையில் பின் எழுதப்படுவது அல்லது முத்திரையிடப்படுவது. எழுத்தால் எழுதப்பட்ட தொகையிலிருந்து எண்ணால் குறிப்பிடப்படும் தொகை வேறுபடும்பொழுது. பணத்தைக் கொடுக்காமல், வங்கியர் அதனைத் திருப்பி அனுப்புவர்.

analytical petty cash book — பகுப்புச் சில்லரைக் கணக்குப் புத்தகம்: சில்லரைச் செலவினங்களுக்காக உள்ளது.

annual accounts – ஆண்டுக் கணக்குகள்: சட்டதிட்டத்திற்குட்பட்டு ஆண்டுதோறும் ஒரு நிறுவனம் தன் நிதிநிலை அறிக்கைகளைச் செய்தித்தாளில் வெளியிடல். இவற்றில் ஐந்தொகை, வரவு செலவுக் கணக்கு, நிதி மூலங்கள் முதலியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

annual general meeting — ஆண்டுப் பொதுக் கூட்டம்: ஒரு நிறுமத்தின் பங்குதாரர்களின் ஆண்டுக் கூட்டம் ஒவ்வோராண்டும் நடைபெறுவது. இதில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் வழங்கப்படும். இயக்குநர்கள், தணிக்கையாளர்கள் நியமனம் செய்தலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கலை உறுதி செய்தலும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பெறும்.

annual report – ஆண்டறிக்கை: ஒரு நிறுமத்தின் இயக்குநர்கள் அறிக்கையையும் ஆண்டுக் கணக்குகளையும் கொண்டது. பங்குதாரர்களுக்கு வழங்கப்படுவது.

annual return – ஆண்டு ஈவு: ஆண்டு விவரத் தாக்கல். நிறுமங்கள் சட்டப்படி நிறுமங்களின் பதிவாளருக்கு ஆண்டு தோறும் நிறுமப் பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன் அனுப்பப்படுவது. இதில் நிறுமச் சட்டப்படி தேவைப்படும் எல்லா விவரங்களும் இருக்கும்.

announcement – அறிவுப்பு:. நிறுமம் பற்றிய செய்தித் தெரிவிப்பு.

annuitant - ஆண்டுத் தொகை பெறுபவர்: குறிப்பிட்ட தொகையை ஒர் ஆண்டில் பெறுபவர்.

annuity – ஆண்டுத் தொகை: ஒப்பந்தப்படி ஆண்டுக்கொரு தடவை காப்புறு நிறுமத்திற்குச் செலுத்தப்படும் தொகை.

annuity method – ஆண்டுத்தொகை முறை: இம் முறையில் ஒரு சொத்தினை வாங்கியதில் ஈடுபடுத்தப்பட்ட முதலில் ஏற்படுகிற வட்டி நட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.