பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ante

9

arre




அந்த வட்டி சொத்தின் ஏட்டு மதிப்பில் கணக்கிடப்படுகிறது. வட்டிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கழிக்கப்பட வேண்டிய தேய்மானமானது, ஆண்டுத் தொகை வாய்பாட்டிலிருந்து கணக்கிடப்படுகிறது.

ante date - முன்னாள்: ஒரு காசோலையை அது எடுக்கப்படும் நாளுக்கு முன் தேதியிடல்.

applicant – விண்ணப்ப: விண்ணப்பம் செய்பவர்.

application - விண்ணப்பம்: விண்ணப்பப் படிவம்.

application fees - விண்ணப்பக் கட்டணம்.

application form – விண்ணப்பப் படிவம்: ஒரு புதிய நிறுவனம் பொது மக்களிடமிருந்து பணம் திரட்ட வெளியிடும் படிவம். அதன் வாய்ப்புகள் அல்லது தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

appreciation — உயர்வு: 1) பணவீக்கத்தால் இருப்பின் மதிப்பு கூடுதல் 2) நாணயத்தின் மதிப்பு கூடுதல் ஒ, depreciation.

appointment – அமர்வு: ஒரு நிறுமத்தில் இயக்குநர், பணியாளர் முதலியோரை நியமனம் செய்தல்

apportionment - பங்கீடு: ஆதாயத்தைப் பகுத்துக் கொடுத்தல்.

appralsement - மதிப்பீடு: ஒரு பொருளின் மதிப்பை உறுதி செய்தல்

appropriation — ஒதுக்கீடு. 1) ஒரு நிறுமம் தன் நிகர ஆதாயத்தை ஒதுக்கி வைத்தல். இதில் வருமான வரி செலுத்தல், ஈவுத் தொகை அளித்தல் முதலியவை அடங்கும். 2) கடனுக்காக ஒதுக்கி வைக்கப்படும் தொகை. 3) ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்ட சரக்குக்குரிய ஆவணம்.

appropriation of payments — செலுத்து தொகை ஒதுக்கீடு: செலுத்தப்பட வேண்டிய தொகையை ஒதுக்கிவைத்தல்.

arbitrage - விலை வேற்றுமை வாணிபம்: பற்பல சந்தைகளில் நிலவும் விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிபம்.

arrangement – உளவடைப்பு: கடன் கொடுத்தவருக்குக் கடனாளி கடன் தொகையைச் சிறுகச் சிறுகக் கொடுக்கச்செய்து கொள்ளும் ஏற்பாடு. திவால் நிலையில் நடைபெறுவது.

arrears - நிலுவைகள்: வரவேண்டிய தொகைகள்.

arrears of dividend – பங்கு ஈவுப் பாக்கி: வரவேண்டிய பங்குத் தொகை.